Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Yedho Oor Araiyil Lyrics

Yedho Oor Araiyil Lyrics

Full Song Only On DooPaaDoo!

ஏதோ ஓர் அறையில்
வேறேதோ செய்ய நுழைந்தேன்
அங்கே ஏன் நீயும் இருந்தாய்?
நீ பொருந்தவில்லை!
நான்கைந்து நடிகை
போல் சாயல் கொண்டு தெரிந்தாய்
முதல் பார்வை காதல் கொடுத்தாய்
நான் வருந்தவில்லை!
சினிமா கதையாய் தெரிந்தும்
நான் கேட்டது போல் இருந்தும்
புதிதாய் அதை நான் உணர்ந்தேன்
என் வாழ்க்கையை நான் திறந்தேன்!

ஏதோ ஓர் அறையில்…
ஏதோ ஓர் அறையில்
ஏதோ ஓர் அறையில்
வேறேதோ செய்ய நுழைந்தேன்
அங்கே ஏன் நீயும் இருந்தாய்?
நீ பொருந்தவில்லை!
நான்கைந்து நடிகை
போல் சாயல் கொண்டு தெரிந்தாய்
முதல் பார்வை காதல் கொடுத்தாய்
நான் வருந்தவில்லை!

உன் கண்கள் அனைவரையும்
கவர்ந்திழுக்கும் – நான்
நீ வேறு கண் வேறென்று பார்த்ததில்லை!
சிரிப்பினில் யாரையும் நீ
மயக்கிடுவாய்
நீயும் உன் சிரிப்பும் வெவ்வேறு இல்லை!
உன்னை உன் பாகங்களாய்
பிரிக்காமல் கண்டேன் அன்று
உன்னை உன் போலே நான்
முழுதாக கொண்டேன்!
இமைக்கா நொடிகள் உறைய
இசையால் இதயம் நிறைய
அசையா உலகம் முழுதும்
நமை பார்த்துக் கொண்டே இருக்க!

ஏதோ ஓர் அறையில்
நான் ஏதோ செய்து கிடந்தேன்
நீ அங்கே அன்று நுழைந்தாய்
நான் மறக்கவில்லை!
என் உள்ளக் கதவும்
நீ தானே அன்று திறந்தாய்
யார் யாரோ தட்டிப் பார்த்தும்
அது திறக்கவில்லை!

தூரத்தில் இருக்கும் காதல்
தூய்மையென…
யாவரும் சொன்னதை நான் நம்பவில்லை
தனிமையில் உன்னுடன் நான்
இருக்கையிலே – நாம்
தீண்டாத நிமிடம் ஒன்று இருந்ததில்லை
உன் நாவா, என் வாயா
தெரியாமல் முத்தம் வைத்தோம்
உன் காலா என் கையா
புரியாமல் காதல் செய்தோம்

உலகமே நீயென்றாகினாய்!

நாம் காதல் செய்யும் நொடியில்
சில தீப்பொறிகள் தெரித்தோம்
நாம் கோபம் கொள்ளும் நொடியில்
இந்த பூமி மொத்தம் எரித்தோம்!

—–

Edho Or Araiyil
Veredho Seyya Nuzhaindhen
Angge En Neeyum Irundhaay?
Nee Porundhavillai!
Naangaindhu Nadigai
Pol Saayal Kondu Therindhaay
Mudhal Paarvai Kaadhal Koduthaay
Naan Varundhavillai!
Sinimaa Kadhaiyaay Therindhum
Naan Kettadhu Pol Irundhum
Pudhidhaay Adhai Naan Unarndhen
En Vaazhkkaiyai Naan Thirandhen!

Edho Or Araiyil…
Edho Or Araiyil
Edho Or Araiyil
Veredho Seyya Nuzhaindhen
Angge En Neeyum Irundhaay?
Nee Porundhavillai!
Naangaindhu Nadigai
Pol Saayal Kondu Therindhaay
Mudhal Paarvai Kaadhal Koduthaay
Naan Varundhavillai!

Un Kankal Anaivaraiyum
Kavarndhizhukkum – Naan
Nee Veru Kan Verendru Paarthadhillai!
Sirippinil Yaaraiyum Nee
Mayakkiduvaay
Neeyum Un Sirippum Vevveru Illai!
Unnai Un Paagangalaay
Pirikkaamal Kanden Andru
Unnai Un Pole Naan
Muzhudhaaga Konden!
Imaikkaa Nodigal Uraiya
Isaiyaal Idhayam Niraiya
Asaiyaa Ulagam Muzhudhum
Namai Paarthuk Konde Irukka!

Edho Or Araiyil
Naan Edho Seydhu Kidandhen
Nee Angge Andru Nuzhaindhaay
Naan Marakkavillai!
En Ullak Kadhavum
Nee Thaane Andru Thirandhaay
Yaar Yaaro Thattip Paarthum
Adhu Thirakkavillai!

Thoorathil Irukkum Kaadhal
Thooymaiyena…
Yaavarum Sonnadhai Naan Nampavillai
Thanimaiyil Unnudan Naan
Irukkaiyile – Naam
Theendaadha Nimidam Ondru Irundhadhillai
Un Naavaa, En Vaayaa
Theriyaamal Mutham Vaithom
Un Kaalaa En Kaiyaa
Puriyaamal Kaadhal Seydhom

Ulagame Neeyendraaginaay!

Naam Kaadhal Seyyum Nodiyil
Sila Theepporigal Therithom
Naam Kobam Kollum Nodiyil
Indha Poomi Motham Erithom!

Share Your Favourite Lines / Leave A Comment