Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Thoppul Kodi Lyrics

Thoppul Kodi Lyrics

தொப்புள்கொடி வழி உறவாய் வந்தோம்..
மண்மேலே! மண்மேலே!!
திக்கித் திக்கித் தமிழ் படித்தோம் அன்னை..
மடிமேலே! மடிமேலே!!

அகரத்தில் முதல் எழுத்து –
அது உயிர் எழுத்து!
அவள் நேர் அதற்கு!!

அகிலத்தில் பல தெய்வமுண்டு –
அதில் உண்மையுண்டு!
அவள் மேல் அதற்கு!!

தொப்புள்கொடி வழி உறவாய் வந்தோம்..
மண்மேலே! மண்மேலே!!

வலி சுமந்தாள் – உயிர் பெற்றோம்!
கை பிடித்தாள் – நடை கற்றோம்!
புன்னகைத்தாள் – வாழ்வுற்றோம்!
பேசும் கடவுள் அவள்!!!

அன்புகாட்ட அன்னையாக..
சண்டையிடத் தங்கையாக..
சாய்ந்துகொள்ள தோழியாக.. ஓ ஹோ..

கரம்பற்றக் காதலியாக..
உயிர்கொள்ள மனைவியாக..
பெயர்சொல்லப் பிள்ளையாக..
இன்னும் இன்னும் அட எங்கும் எங்கும்..
நிறைந்திருக்கும் அவள் அவளல்லவே.. —

தொப்புள்கொடி வழி உறவாய் வந்தோம்..
மண்மேலே! மண்மேலே!!

இந்த வையம் சுழல பலக் காரணம் என்றால்..
அதில் முதலும் முடிவும் அவள்தானே!
அது புகழ்தானே!!

அந்த வானம் சிரித்து மழைப் பொழியும் என்றால்..
அதன் ஆக்கமும் ஊக்கமும் அவள்தானே!
அது வரம்தானே!!

சுமக்கும் வலிகளும் செய்யும் தியாகமும்..
வெல்லும் பொறுமையும்.. சொல்ல வார்த்தையில்லை..
அதனால் அதனால் நாங்கள்..
அன்பால் வணங்கிடுவோம்!

இன்றும் என்றும் என்றும்..
போற்றி வாழ்த்திடுவோம்!

வாழ்கப் பெண்கள் – எங்கும்
வாழ்கப் பெண்ணினம்!
பெண்கள் புகழ் – என்றும்
வாழ்க வாழ்கவே!

—–

thoppuLkodi vazhi uRavaay vandhdhoam..
maNmaelae! maNmaelae!!
thikkith thikkith thamizh padithoam annai..
madimaelae! madimaelae!!

agarathil mudhal ezhuthu –
adhu uyir ezhuthu!
avaL naer adhaRku!!

agilathil pala theyvamuNdu –
adhil uNmaiyuNdu!
avaL mael adhaRku!!

thoppuLkodi vazhi uRavaay vandhdhoam..
maNmaelae! maNmaelae!!

vali sumandhdhaaL – uyir peRRoam!
kai pidithaaL – nadai kaRRoam!
punnagaithaaL – vaazhvuRRoam!
paesum kadavuL avaL!!!

anpugaatta annaiyaaga..
saNdaiyidath thanggaiyaaga..
saayndhdhugoLLa thoazhiyaaga.. oa Hoa..

karampatRak kaadhaliyaaga..
uyirkoLLa manaiviyaaga..
peyarchollap piLLaiyaaga..
innum innum ada enggum enggum..
niRaindhdhirukkum avaL avaLallavae.. —

thoppuLkodi vazhi uRavaay vandhdhoam..
maNmaelae! maNmaelae!!

indhdha vaiyam suzhala palak kaaraNam endRaal..
adhil mudhalum mudivum avaLdhaanae!
adhu pugazhdhaanae!!

andhdha vaanam sirithu mazhaip pozhiyum endRaal..
adhan aakkamum ookkamum avaLdhaanae!
adhu varamdhaanae!!

sumakkum valigaLum seyyum thiyaagamum..
vellum poRumaiyum.. solla vaarthaiyillai..
adhanaal adhanaal naangaL..
anpaal vaNanggiduvoam!

indRum endRum endRum..
poatRi vaazhthiduvoam!

vaazhkap peNkaL – enggum
vaazhkap peNNinam!
peNkaL pugazh – endRum
vaazhka vaazhkavae!

Share Your Favourite Lines / Leave A Comment